"கூட்டணி கட்சிகளுக்கும் மேயர் பதவிகளை வழங்க வேண்டும்" - திருமாவளவன்

"கூட்டணி கட்சிகளுக்கும் மேயர் பதவிகளை வழங்க வேண்டும்" - திருமாவளவன்

"கூட்டணி கட்சிகளுக்கும் மேயர் பதவிகளை வழங்க வேண்டும்" - திருமாவளவன்
Published on

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கும் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகளுக்கு தேவையான இடங்கள் குறித்த பட்டியலை திமுக மாவட்டச் செயலாளர்களிடம் சமர்பித்துள்ளதாகவும், 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தங்களுக்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com