“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி

“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி

“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி
Published on

கெளரவமான இடங்கள் ஒதுக்கீடு செய்யாவிட்டால், தனித்து போட்டியிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் தங்களது கூட்டணி பலத்தை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் முயற்சித்து வருகிறது. மாநிலம் வாரியாக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், பாஜக மாபெரும் வெற்றி பெற, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் படுதோல்வி அடைந்தன. இதனையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. இந்தக் கட்சிகளின் கூட்டால் பாஜக படுதோல்வி அடைந்தது. சமாஜ் வெற்றிவாகை சூடியது. இதனையடுத்து, அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என்று பேச்சுகள் அடிபட்டன. அதனை உறுதிசெய்யும் வகையில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் சோனியா காந்தியுடன், மாயாவதி நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருந்தன. 

இந்நிலையில், கூட்டணி குறித்து பேசிய மாயாவதி, “பாஜகவுக்கு எதிராக கட்டமைக்கப்படும் கூட்டணிக்கு எங்களுடைய கட்சி எதிரானது அல்ல; ஆனால் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். ஒருவேளை அமைய இருக்கும் காங்.கூட்டணியில் கௌரவமான தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால், நாங்கள் தனித்து போட்டியிடுவோம். எதிர்க்கட்சிகளின் முயற்சி எப்படியாவது பாஜகாவை மீண்டும் ஆட்சியில் அமரவிடாமல் தடுப்பதே.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com