ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய முயற்சி: தீவிரமாக கண்காணிக்கும் பிசிசிஐ

ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய முயற்சி: தீவிரமாக கண்காணிக்கும் பிசிசிஐ
ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய முயற்சி: தீவிரமாக கண்காணிக்கும் பிசிசிஐ

ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்சிங் செய்வதற்கான முயற்சி நடந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர், மேட்ச் பிக்ஸிங் செய்வதற்கான அணுகுமுறை உள்ளது எச்சரித்துள்ளார். இதனால் பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிப்பை தொடங்கியுள்ளது.

ஐபிஎல்லின் 13 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெறுகிறது, இதனால் மோசடியாளர்கள் நேரடியாக வீரர்களை அணுகுவதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைத்துள்ளது. ஆனால் அவர்கள் ஆன்லைன் மூலமாக சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்ஸிங்கிற்கு அணுகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெரும்பாலான வீரர்கள், குறிப்பாக இளையவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் உள்ளனர்.

பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர்  அஜித் சிங் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.."  மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய உதவுமாறு தன்னை ஒருவர் அணுகியதாக ஒரு வீரர் எங்களிடம் தெரிவித்துள்ளார். ஊழலில் ஆர்வமுள்ள நபரை நாங்கள் கண்காணித்து வருகிறோம், அவர் பிடிபட சிறிது காலம் ஆகும்" என்று கூறினார். ஊழல் எதிர்ப்பு நெறிமுறைகளின்படி, ரகசிய நோக்கங்களுக்காக அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

தற்போது பி.சி.சி.ஐ இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்போர்ட்ராடருடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இது வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் போது அதன் மோசடி கண்டறிதல் சேவைகள் (எஃப்.டி.எஸ்) மூலம் மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் மற்றும் பிற ஊழல் நடைமுறைகளைத் தடுக்கும் சேவைகளை வழங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com