ஈழ விடுதலை யுத்தம் புதிய பரிமாணம் எடுத்துள்ளது: வைகோ பேட்டி

ஈழ விடுதலை யுத்தம் புதிய பரிமாணம் எடுத்துள்ளது: வைகோ பேட்டி
ஈழ விடுதலை யுத்தம் புதிய பரிமாணம் எடுத்துள்ளது: வைகோ பேட்டி

ஈழ விடுதலை யுத்தம் முடிந்துவிடவில்லை; புதிய பரிமாணம் எடுத்துள்ளது என்று ஜெனீவாவில் இருந்து சென்னை திரும்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ,நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வைகோ, நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கடந்த 16 ஆண்டுகளில் 4 முறை விசா மறுக்கப்பட்ட நிலையில் தற்போதுதான் ஜெனீவா செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரம் கூட இடைவெளியின்றி ஜெனீவா கூட்டத்திற்காக பணியாற்றினேன். இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை என்பதை விளக்கினேன். ஈழ விடுதலை யுத்தம் முடிந்துவிடவில்லை; புதிய பரிமாணம் எடுத்துள்ளது. தமிழீழ விடுதலையை தடுக்க எவராலும் முடியாது. இலங்கை பிரச்சனைக்கு தீர்வு, தனி ஈழம் என ஐ.நா.வில் வலியுறுத்தினேன். ஐநா பொதுச்செயலாளர் இலங்கை சென்று நேரில் நிலைமையைக் கண்டறிய வேண்டுகோள் விடுத்தேன். இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏதுவாக ஐ.நா பொதுச்செயலாளரை அனுப்ப வேண்டும் என பேசினேன். ஜெனீவா பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது’ என்றார்.

சென்னையில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் வைகோ தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com