\
"ஏமாற்றிவிட்டனர்; மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன்" - மேரி கோம்

"ஏமாற்றிவிட்டனர்; மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன்" - மேரி கோம்

"ஏமாற்றிவிட்டனர்; மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன்" - மேரி கோம்
Published on

தான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்திருக்கிறார். 

டோக்கியோலிருந்து இந்தியா திரும்பிய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ’’நான் விளையாட களத்தில் இறங்குவதற்கு முன்பு என்னிடம் வந்த நடுவர், நான் அணிந்திருந்த ஜெர்சியை அணியக்கூடாது என்றார். தொடக்கம் முதலே நான் அணிந்து வந்த ஜெர்சி குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜெர்சியை மாற்ற வேண்டும் என முன்கூட்டியே கூறவில்லை. அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் சோதிக்கும் அவர்கள் ஜெர்சியை ஏன் சோதிக்கவில்லை. போட்டிக்கு தயாராகக் கூடாது என்ற நோக்கில் கடைசி நேரத்தில் என்னை மனரீதியாக துன்புறுத்தினர். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து உறுதியாக நான் புகார் அளிக்க உள்ளேன்’’ என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com