காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட் அறிவிப்பு
காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட எந்த நட்புறவும் வைத்துக்கொள்ள மாட்டாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் வரைவு அரசியல் தீர்மான‌ம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ‌காங்கிரஸ் கட்சியுடன் எந்த விதமான தேர்தல் கூட்டணியும் வைக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தி ‌விவாதிக்கப்பட்ட பின்னர், ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‌மாநாட்டில் தீர்மானம் குறித்து அறிவிக்கப்‌பட உள்ளது.

தேசிய அளவில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற யோசனையை கட்சிக்குள் சீதாராம் யெச்சூரி முன்வைத்திருந்தார். இதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் கார்த் எதிர்ப்பு தெரிவித்தார். கொள்கையளவில் காங்கிரஸும், பாஜகவும் ஒன்று தான் என்றும், அதனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது கட்சியை பலவீனமடைய செய்யும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் காங்கிரஸுடன் எந்த கூட்டணியும் வைத்துக்கொள்ள மாட்டாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com