\
"கூடுதல் இடங்கள் வாங்கி, அதிக தொகுதிகளில் தோற்பது நல்லதல்ல" - மணிசங்கர் அய்யர்

"கூடுதல் இடங்கள் வாங்கி, அதிக தொகுதிகளில் தோற்பது நல்லதல்ல" - மணிசங்கர் அய்யர்

"கூடுதல் இடங்கள் வாங்கி, அதிக தொகுதிகளில் தோற்பது நல்லதல்ல" - மணிசங்கர் அய்யர்
Published on: 

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் கிடைத்திருப்பது மகா திருப்தி என அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், ""சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்திருப்பது மகா திருப்தி. கூடுதல் இடங்கள் வாங்கி, அதிக இடங்களில் தோற்பது நல்லதல்ல. 15 முதல் 20 இடங்களில் வெற்றி பெற்றாலே பெருமைதான். வேட்பாளரைத் தேர்வு செய்வதுதான் மிக முக்கியம். அரசியலுக்கு நிறைய சந்தர்ப்பவாதிகள்தான் வருகிறார்கள். எந்தக் கட்சியில் சீட் கிடைக்கிறதோ அங்கு சேர்ந்துவிடுகிறார்கள்" என்றார் அவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com