மேனகா காந்தி மற்றும் வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு

மேனகா காந்தி மற்றும் வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு
மேனகா காந்தி மற்றும் வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் புதிய பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை முதன் முதலில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா டெல்லியில் வெளியிட்டார். 182 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் வாரணாசியில் மோடியும், காந்திநகரில் அமித்ஷாவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர். 

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து போட்டியிடும் 39 வேட்பாளர்கள் கொண்ட புதிய பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், அவரது மகன் வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று காலை இணைந்த நடிகை ஜெயப்பிரதா, உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா காஜீபூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இத்தோடு சேர்த்து பாரதிய ஜனதா அறிவித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் 3 பேர் கொண்ட 12வது பட்டியலை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com