டேட்டிங் செயலியில் வேலை கேட்ட இளைஞர்.. ”We are not same bro” என போட்ட ட்வீட் வைரல்!

டேட்டிங் செயலியில் வேலை கேட்ட இளைஞர்.. ”We are not same bro” என போட்ட ட்வீட் வைரல்!
டேட்டிங் செயலியில் வேலை கேட்ட இளைஞர்.. ”We are not same bro” என போட்ட ட்வீட் வைரல்!

தொழில்நுட்ப வசதிகளின் கை ஓங்கி இருக்கும் வேளையில் மனிதர்களின் பெரும்பாலான தேவைகளை ஆப்ஸ்களே நிறைவேற்றி விடுகின்றன. தூங்கி எழுவது முதல் தூங்க செல்வது வரை எல்லாவற்றையும் ஃபோன் வழியாக ஆப்ஸ்களே கணக்கச்சிதமாக கையாண்டு வருகின்றன.

சாப்பிடுவதற்கு, வழி தேட, வேலை தேட, பேச என எல்லாவற்றுக்கும் வகை வகையான செயலிகள் மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதில் மற்றொரு தகவல் என்னவென்றால் அரட்டை அடிப்பதற்கான செயலிகளில் எப்படி பணப்பரிவர்த்தனை செய்கிறோமோ அதேபோல பிற செயல்களுக்கான செயலிகளில் தேவையான வேற செயல்களையும் செய்துக்கொள்ளும் வகையிலான எக்ஸ்சேஞ்ச் வசதிகளையும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் வேலைவாய்ப்பை பெறுவதற்காக லிங்க்ட் இன் என்ற தளம் பெருமளவில் எல்லாருக்கும் உதவியாக இருக்கும் நிலையில் அட்னான் என்ற நபர் டேட்டிங் செயலில் வேலை தேடியது குறித்த ட்விட்டர் பதிவும் ஸ்கிரீன்ஷாட்டும்தான் நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது.

அதன்படி, பம்பிள் என்ற பிரபல டேட்டிங் அப்ளிகேஷனில் பெண் ஒருவருடனான உரையாடலைதான் அட்னான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் திறமையாளர்களை வேலைக்கு எடுக்கும் துறையில் HR ஆக இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என அந்த பெண் கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல் “எலக்ட்ரிகல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் முதுகலை படித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்திலேயே என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.” என அட்னான் ரிப்ளை செய்திருக்கிறார்.

அதற்கு, “என்ன மாதிரியான வேலையை எதிர்பார்க்கிறீர்கள் என கேட்க நினைத்தேன். இந்த ஆண்டுடன் உங்கள் படிப்பு முடிகிறதா?” என அந்த பெண் பதில் அளித்திருக்கிறார். இந்த உரையாடல்களின் ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்த அட்னான், “வேலைக்காக நீங்களெல்லாம் லின்க்ட் இன் பயன்படுத்துறீங்க. ஆனால் நான் பம்பிளில் வேலை தேடுகிறேன்” எனக் கேப்ஷன் இட்டிருக்கிறார்.

அட்னானின் இந்த ட்விட்டர் பதிவு வைரலாகவே, பலரும் அட்னானின் சாமர்த்தியத்தை பாராட்டி வருகிறார்கள். முன்னதாக இதேப்போன்று டேட்டிங் செயலிகளில் காதலன் காதலிகளை கண்டறிவதற்கு பதிலாக வீடு தேடுவது போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தியது குறித்த பதிவுகளும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com