ஆர்டர் செய்ததோ ட்ரோன் கேமரா.. வந்ததோ ஒரு கிலோ உருளைக்கிழங்கு...

ஆர்டர் செய்ததோ ட்ரோன் கேமரா.. வந்ததோ ஒரு கிலோ உருளைக்கிழங்கு...
ஆர்டர் செய்ததோ ட்ரோன் கேமரா.. வந்ததோ ஒரு கிலோ உருளைக்கிழங்கு...

ஆன்லைன் மூலமாக ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் ரூ.79,000 மதிப்புள்ள ட்ரோன் கேமரா ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு வந்த பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்தது நினைவிருக்கலாம். இதையொட்டி நெட்டிசன்கள் கலாய்த்த சூடு தணிவதற்குள், பீகாரில் ஆன்லைன் மூலமாக ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் நாளந்தாவை சேர்ந்தவர் ஒருவர் ஆன்லைன் விற்பனை நிறுவனமான மீஷோவில் ட்ரோன் கேமரா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் பார்சலும் வந்து சேர்ந்தது. பார்சல் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் பார்சலை பிரிப்பதை வீடியோ காட்சியாக பதிவு செய்தார். பார்சலை கொண்டு வந்தவரிடமே அதனை திறந்து காண்பிக்கும்படி கூறினார். அப்போது பார்சலில் டிரோன் கேமராவுக்கு பதில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு இருந்துள்ளது. ட்ரோன் கேமரா ஆர்டர் செய்யும்போதே அதற்குரிய முழுத் தொகையை முன்கூட்டியே செலுத்தி விட்டதாக தெரிவித்திருக்கிறார் அந்த நபர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ”ஆதார் இருந்தால்தான் சோறு” -விருந்தினர்களிடம் கறார் காட்டிய மணமகள் வீட்டார்; ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com