வாட்டி வதைக்கும் வெயில்... ‘பிற உயிர்களுக்கும் கருணை காட்டுங்கள்’ - வைரலாகும் வீடியோ

வெயிலால் தண்ணீருக்கு அலைந்த அணிலுக்கு ஒருவர் மனிதநேயத்துடன் உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Squirrel
SquirrelGoogle Image

நாடு முழுவதும் கடும் கோடை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மனிதர்களாகிய நாம், பல்வேறு விஷயங்களை மேற்கொள்வோம். அதில் மிக முக்கியமாக உடல் வெப்பத்தை தணிக்க அதிகப்படியான குளிர்பானங்கள், இயற்கை பானங்கள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்வோம். இதுவே பறவைகள், அணில் போன்ற சிற்றுயிர்களின் நிலையை யோசித்துப்பார்த்தால், எதார்த்தத்தில் அவற்றுக்கு கோடையில் தண்ணீர் கிடைப்பதுகூட பெரும் சிரமமாக இருக்கிறது.

Summer
Summer Unsplash

இதை கருத்தில் கொண்டு, மனித நேயர்கள் பலர் மொட்டைமாடிகளிலும் பால்கனிகளிலும் மற்ற உயிர்கள் குடிப்பதற்காக தண்ணீர் வைப்பதுண்டு. இதன்வழியே தண்ணீர் தேடி அலையும் சிற்றுயிர்கள் தங்களது தாகத்தை தீர்த்துக்கொள்ளும்.

இப்படித்தான் மனிதநேயமிக்க ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தாகம் தேடி அலைந்த அணிலுக்கு இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் மூலம் நீர் கொடுத்து தாகத்தை தணிக்கிறார்.

பின்பு அந்த இளைஞர், அதை கையில் எடுத்து தடவிக் கொடுக்கிறார். அந்த அணிலும் பாசத்துடன் அவர் கையில் ஏறுகிறது. 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த வீடியோ, இணையவாசிகள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com