”ஃபால்ஸ பார்த்த மாதிரி எடு” - போட்டோ மோகத்தால் மாயமான இளைஞர்; பதற வைக்கும் வீடியோ!

”ஃபால்ஸ பார்த்த மாதிரி எடு” - போட்டோ மோகத்தால் மாயமான இளைஞர்; பதற வைக்கும் வீடியோ!

”ஃபால்ஸ பார்த்த மாதிரி எடு” - போட்டோ மோகத்தால் மாயமான இளைஞர்; பதற வைக்கும் வீடியோ!
Published on

மலைப்பகுதிகளில் சாகசம் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள் பலர் காடுகளிலும், மலை இடுக்குகளிலும் சிக்கி தவிப்பதும் , தவிர்க்க முடியாத நேரங்களில் உயிரையே இழப்பதுமான செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், நண்பருடன் கொடைக்கானல் அருகே உள்ள புல்லாவெளி பகுதியில் அமைந்திருக்கும் அருவியின் மேற்பரப்பில் நின்று போட்டோ எடுக்க முயன்ற இளைஞர் கால் இடறி அந்த அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்து மாயமாகியிருக்கிறார்.

ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற 28 வயது இளைஞர் மங்களம்கொம்பு மலைக்கிராமத்தில் ஏலக்காய் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், அஜய் பாண்டியனும் அவரது நண்பர் கல்யாணசுந்தரமும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு நேற்று (ஆக.,3) பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது அருவியின் மேல் பகுதிக்கு சென்று போட்டோ எடுக்க முயன்றபோது திடீரென வழுக்கி கீழே விழுந்து அருவியில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அஜய் பாண்டியனின் நண்பர் தாண்டிக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்புத்துறையினருடன் சம்பவ இடத்துக்கு வந்து தேடிப் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை அருவியில் விழுந்த அஜய் பாண்டியன் மீட்கப்பட்டப்பாடில்லை. இந்நிலையில், நிலைத்தடுமாறி அருவி பள்ளத்தாக்கில் அந்த இளைஞர் விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகியிருக்கிறது. இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ALSO Watch: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com