குக்கர் சாப்பாட்டில் எப்படி ஃப்ரட் ரைஸ் சுவை வருது?! விஷயம் தெரிஞ்சு அதிர்ந்துப்போன நபர்!

குக்கர் சாப்பாட்டில் எப்படி ஃப்ரட் ரைஸ் சுவை வருது?! விஷயம் தெரிஞ்சு அதிர்ந்துப்போன நபர்!
குக்கர் சாப்பாட்டில் எப்படி ஃப்ரட் ரைஸ் சுவை வருது?! விஷயம் தெரிஞ்சு அதிர்ந்துப்போன நபர்!

நூதனமான விசித்திரமான பதிவுகளின் கிடங்காகவே சமூக வலைதளங்கள் இருக்கும். அவற்றில் பல ஆச்சர்யத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால் சில பதிவுகள் அருவருப்பை தரவும் தயங்காது. அதுவும் உணவு தொடர்புடைய பல வீடியோக்கள் நெட்டிசன்களை, உணவு பிரியர்களை முகம் சுழிக்கவே செய்திருக்கும். அப்படியான நிகழ்வு குறித்த பதிவு பற்றிதான் காணப் போகிறோம்.

அதன்படி, விநோதமான காரணங்களை அடக்கியுள்ள ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர் தன் வீட்டில் சமைக்கும் சாதம் எப்படி ஃப்ரைட் ரைஸுக்கு நிகரான சுவையை கொடுக்கிறது என்பது பற்றி பதிவிட்டுள்ளது நெட்டிசன்களை அதிர வைத்திருக்கிறது.

shitposting என்ற ரெடிட் கணக்கில், "எலக்ட்ரானிக் குக்கரில்தான் சாதம் வைப்பது வழக்கம். அதன்படி எப்போதுமே அந்த குக்கரில்தான் அரிசியை வேகவைப்பதுண்டு. ஆனால் சாதாரண அரிசி சாதம் ஃப்ரைட் ரைஸை போன்ற சுவையிலேயே இருக்கும். ஒருவேளை எங்கள் கைப்பக்குவம் அந்த அளவுக்கு அருமையாக இருந்திருக்கிறது என்று நினைத்து அந்த சாதத்தை நித்தமும் சாப்பிட்டு வந்தோம்.

இப்படி இருக்கையில் அந்த எலக்ட்ரானிக் குக்கரை தூய்மை செய்யலாம் என அதன் அடிப்பாகத்தை கழற்றிய போது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த குக்கரின் அடிப்பாகத்தில் ஏகப்பட்ட பல்லிகள் செத்து காய்ந்துப் போய் கிடந்திருக்கின்றன. அந்த பொசுங்கிப் போன பல்லிகள் இருந்த குக்கரில்தான் இத்தனை நாட்களாக அரிசியை வேகவைத்து சாப்பாடாக சாப்பிட்டு வந்திருக்கிறோம்" என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரது புருவமும் உயர்ந்ததோடு, சிலர் கிண்டலாகவும் பதிவிட்டிருக்கிறார்கள். அதில், “குக்கரின் அடியில் இருந்த பல்லிகளை அப்படியே விட்டுவிட்டு அதே குக்கரிலேயே வழக்கம் போல சாதம் வைத்து சாப்பிடுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com