ஆட்டை வெட்டுவதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்: கானா நாட்டுக்காரருக்கு கனவால் வந்த சோகம்

ஆட்டை வெட்டுவதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்: கானா நாட்டுக்காரருக்கு கனவால் வந்த சோகம்

ஆட்டை வெட்டுவதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்: கானா நாட்டுக்காரருக்கு கனவால் வந்த சோகம்
Published on

கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து தூங்கிக்கொண்டிருக்கும் போது தனது ஆணுறுப்பையே ஒருவர் வெட்டிக் கொண்ட விபரீத சம்பவம் மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் அரங்கேறியிருக்கிறது.

கானா நாட்டின் மத்திய மாகாணமாக இருக்கக் கூடிய அஸ்ஸின் ஃபோசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கொஃபி அட்டா என்ற 47 வயதான விவசாயி. இவர்தான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கனவில் ஆட்டை வெட்டுவதாக எண்ணி தனது பிறப்புறுப்பை வெட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடந்திருக்கிறது.

இது தொடர்பாக கொஃபியின் மனைவி அட்வோ கொனாடு, “நான் வெளியே சென்றிருந்த நேரத்தில்தான் இப்படி நடந்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரால்தான் என்னால் சம்பவம் குறித்து அறிய முடிந்தது. வீட்டுக்கு வந்து பார்த்ததும் என் கணவரின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தமாக கொட்டிக் கொண்டிருந்தது. உடனடியாக ரத்தப் போக்கை நிறுத்துவதற்காக டையப்பர் அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

பிபிசியின் செய்தி அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட கொஃபி Komfo Anokye Teaching Hospital-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வெட்டப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள கொஃபி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார்கள். ஆனால் ஆம்புலன்ஸுக்கு கொடுக்கவே முதலில் என்னிடம் பணம் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசியுள்ள கொஃபி, “சேரில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது சமைப்பதற்காக ஆட்டை வெட்டுவது போல கனவு வந்தது. தூங்கிக் கொண்டிருந்த போது எப்படி என் கையில் கத்தி வந்தது என்று தெரியவில்லை. அதுதான் குழப்பமாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள மருத்துவர்கள், கொஃபியின் பிறப்புறப்பு மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது அறுவை சிகிச்சை முடிந்து ஆறு வாரங்களுக்கு பிறகு அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் எனக் கூறியிருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com