மாட்டிறைச்சி தடை: என்ன சொல்கிறார் மம்தா பானர்ஜி?
மாட்டிறைச்சி தடை குறித்து கருத்து மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்றும் கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி தடை குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, “மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது” என்றார். மேலும், மத்திய அரசின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், இத்தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஒருவருடைய உணவில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று கூறிய வந்த மம்தா, இப்படிப்பட்ட முடிவை தன்னிச்சையாக எடுக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
புனித ரமலான் மாதம் தொடங்கும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட தடை அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.