வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!

வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!

வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!

மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார்.

வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை மம்தா வெளியிட்டிருந்தார். 

அந்த அறிவிப்பில் அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டை. கடந்த 2009 (இடைத் தேர்தல்), 2011 மற்றும் 2016 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தான் இங்கு வெற்றி பெற்று சட்டப்பேரவையை அலங்கரித்தனர்.

கடந்த 2016 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற Suvendu Adhikari தற்போது பாரதிய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளார். அவர் இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதன் மூலம் மேற்கு வங்க அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 79 தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், 50 பெண்கள்,  42 இஸ்லாமியர்கள், 17 பழங்குடியினர்கள் வேட்பாளர்களாக அறிமுகம் செய்து கவனம் ஈர்த்துள்ளார் மம்தா. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிக்கான வேட்பாளர்களை மம்தா உறுதி செய்துள்ளார். மீதமுள்ள மூன்று தொகுதிகள் நட்பு பாராட்டும் காட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனவாம். இந்த வேட்பாளர் பட்டியல் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார் மம்தா பானர்ஜி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com