அத்வானியை நேரில் நலம் விசாரித்த மம்தா - சோனியா, ராகுலுடன் சந்திப்பு
பாஜக மூத்த தலைவர் அத்வானியை மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் அத்வானியின் அறையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். அத்வானியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக ம்மதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோரையும் மத்தா பானர்ஜி சந்தித்தார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் குலாம்நபி ஆசாத், அகமது படேல் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத், மம்தாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
மம்தா பானர்ஜி பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிரணியை உருவாக்கி வருகிறார். அதன் முக்கிய முயற்சியாக மேற்குவங்கத்தில் மாபெரும் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளார். அதற்காக பாஜகவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் உட்பட பலரையும் சூறாவளி பயணம் மேற்கொண்டு சந்தித்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.