”நான் கொடுத்த காரில் அவங்க ஜாலியா போறாங்க” - Ex காதலியால் நொந்துப்போன வாலிபர்!

”நான் கொடுத்த காரில் அவங்க ஜாலியா போறாங்க” - Ex காதலியால் நொந்துப்போன வாலிபர்!
”நான் கொடுத்த காரில் அவங்க ஜாலியா போறாங்க” - Ex காதலியால் நொந்துப்போன வாலிபர்!

காதல் வாழ்க்கையில் பிரேக் அப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் புலம்புவது உண்டு. ஒரு சிலர் தனக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்வது, அதை பாடமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது போன்றவைகளும் அகப்படும்.

இப்படி இருக்கையில், மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்பக் கேட்டது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பெண்ணுடன் காதல் உறவில் இருந்து வந்த அவருக்கு அண்மையில்தான் பிரேக் அப் ஆகியிருக்கிறது. அந்தப் பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் கொடுத்த காரை அவரது புதிய காதலன் ஓட்டி வருவது பிடிக்காததால் அதை கேட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடபாக அந்த நபரின் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதை காணலாம்:

”9 வருஷமாக காதலித்து வந்தேன். ஆனால் தற்போது என்னை அவர் பிரேக் அப் செய்துவிட்டார். நாங்கள் பிரிந்ததை ஏற்றுக்கொள்கிறேன். பிரேக் அப் ஆகிவிட்டதற்காக இதுவரை எதையுமே நான் அவரிடம் கேட்டதில்லை.

ஆனால், நான் அவருக்கு பரிசாக கொடுத்த காரை அவரது புதிய காதலன் பயன்படுத்தி வந்தது சமீபத்தில்தான் எனக்கு தெரிய வந்தது. கூடவே நாங்கள் பிரேக் அப் செய்வதற்கு முன்பிருந்தே அந்த பையனுடன் அவர் பழகி வந்திருக்கிறார். டேட்டிங்கில் இருந்த போதெல்லாம் அவருக்கு கார் உட்பட ஏகப்பட்ட பரிசுகளை கொடுத்திருக்கிறேன்.

என்னை அவர் இழிவுபடுத்தி, ஏமாற்றியதை கூட நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் அந்த காரை அவரின் புதிய காதலன் ஓட்டிச் செல்வது எனக்கு பிடிக்கவில்லை. இப்போது எனக்கு என்ன தெரிய வேண்டும் என்றால், நான் வாங்கிக் கொடுத்த காரை உள்ளிட்ட பொருட்களை திரும்பி கேட்பதில் எதும் தவறா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் காரை தவிர மற்ற பொருட்களை கேட்க வேண்டாம். அதையெல்லாம் மறந்துவிடுவதுதான் நல்லது என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com