\
”மக்கள் நீதி மய்யத்தில் மரியாதை இல்லை”- விலகிய இராஜசேகரன்

”மக்கள் நீதி மய்யத்தில் மரியாதை இல்லை”- விலகிய இராஜசேகரன்

”மக்கள் நீதி மய்யத்தில் மரியாதை இல்லை”- விலகிய இராஜசேகரன்
Published on: 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தை கமல் தொடங்கியபோது, முன்னாள் காவல் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சௌரிராஜன் உட்பட பலர் கட்சியில் சேர, வழக்கறிஞர் ராஜசேகர் காரணமாக இருந்தார். கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினராக இவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகர் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து தொலைபேசி மூலமாக பேட்டி அளித்த ராஜசேகர்  "கடந்த 6 மாதங்களாக கட்சி உருவாக அரும் பாடுபட்டேன், ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கூடவே கட்சியில் உரிய மரியாதையும் கிடைக்கவில்லை. என்னுடைய வழக்கறிஞர் தொழிலையும் சரிவர பார்க்க இயலவில்லை" எனவே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com