நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21 ஆம் தேதி மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கு முன்பு ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்துக்கு சென்று அங்கிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன் பின் நாள்தோறும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கருத்துகளை, அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் 10 பேர் அடங்கிய மாநில பேச்சாளர்கள் யார் யார் என்ற பட்டியலை நேற்று வெளியிட்டார்.
அதில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், முரளி அப்பாஸ், கமிலா நாசர், பட்டிமன்ற பேச்சாளர் ஞான சம்பந்தன், ரங்கராஜன், ஆர்.ஆர்.சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

