சமாதிகளுக்கு மாலையிட்டு இடுகாட்டில் இருந்து பரப்புரையை துவங்கிய மநீம வேட்பாளர்

சமாதிகளுக்கு மாலையிட்டு இடுகாட்டில் இருந்து பரப்புரையை துவங்கிய மநீம வேட்பாளர்

சமாதிகளுக்கு மாலையிட்டு இடுகாட்டில் இருந்து பரப்புரையை துவங்கிய மநீம வேட்பாளர்
Published on

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் இடுகாட்டிலிருந்து சமாதிகளுக்கு மாலையிட்டு வணங்கி தன்னுடைய பரப்புரையை தொடங்கினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக இராசகுமார் என்பவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காரைக்குடியில் தனது பரப்புரையை தொடங்கினார். முன்னதாக காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டிற்குச் சென்று, அங்குள்ள சமாதிகளுக்கு மாலையிட்டு வணங்கினார். பின்பு தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் ஊர்வலமாக சென்று தனது பரப்புரை மேற்கொண்டார்.

இவர் தமிழக மக்கள் மன்றத்தின் தலைவராக இருந்து பல சமூக பணிகளை செய்து வந்த நிலையில், காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெருவோரம் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர்களுக்கு உணவளித்ததோடு மருத்துவ சிகிச்சையும் அளித்துவந்தார். ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த சடலங்களை மீட்டு நல்லடக்கம் செய்வது போன்ற பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தவர், சுயேட்சையாக சட்ட மன்ற தேர்தலை சந்திக்க விருந்தார்.

இந்நிலையில் ,இவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இவர் செய்த சேவைகள் மக்கள் மனதில் பதிந்துள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவின் போது தெரியவரும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com