என்னை வெற்றி பெறச் செய்விர் - கண்கலங்கியபடி பாமகவினரிடம் வாக்கு கேட்ட சேவூர் ராமச்சந்திரன்

என்னை வெற்றி பெறச் செய்விர் - கண்கலங்கியபடி பாமகவினரிடம் வாக்கு கேட்ட சேவூர் ராமச்சந்திரன்

என்னை வெற்றி பெறச் செய்விர் - கண்கலங்கியபடி பாமகவினரிடம் வாக்கு கேட்ட சேவூர் ராமச்சந்திரன்
Published on

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்ணீர் மல்க அழுதுகொண்டே தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறியதால் வாக்காளர்களிடையே சலசலப்பு நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இராமசந்திரன் சாமி தரிசனம் செய்து விட்டு பாமக கட்சியை சார்ந்த நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கண்ணீர் மல்க அழுது கொண்டே தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கூறிக்கொண்டே கண்களில் வழிந்த நீரை துணியால் துடைத்துக் கொணடார். இதைப்பார்த்த அங்கு கூடியிருந்த பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், கண்டிப்பாக நீங்கள் தான் வெற்றி பெற்று அடுத்த சட்டமன்ற உறுப்பினராக செல்வீர்கள் என சத்தியம் செய்தனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com