டிரெண்டிங்
மனக்கசப்பு இருந்தாலும் அதிமுக தொண்டனாகவே பணியாற்றுவேன்: மைத்ரேயன்
மனக்கசப்பு இருந்தாலும் அதிமுக தொண்டனாகவே பணியாற்றுவேன்: மைத்ரேயன்
மனங்கள் இணையவில்லை என முகநூலில் தான் பதிவிட்டதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், இரு அணிகளிடையே கருத்து வேறுபாடுகள் தொடர்வதால் ஏற்பட்ட மனவேதனையே தன்னுடைய முகநூல் பதிவுக்கு காரணம் என விளக்கமளித்தார். மனங்கள் இணையவில்லை என முகநூலில் தான் பதிவிட்டதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், மனக்கசப்பு இருந்தாலும் அதிமுக தொண்டனாகவே தேர்தலில் பணியாற்றுவேன் என்றும், இரு அணிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளே என்னுடைய பதிவுக்கு காரணம் என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.