டிரெண்டிங்
மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா
மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா
மதுரை மாவட்டம் மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.