\
மதுரை: வாக்கு எண்ணும் மையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த முகவர்களால் பரபரப்பு

மதுரை: வாக்கு எண்ணும் மையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த முகவர்களால் பரபரப்பு

மதுரை: வாக்கு எண்ணும் மையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த முகவர்களால் பரபரப்பு
Published on

வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல ஒரே நேரத்தில் அதிகளவில் முகவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், பரவை, அ.வெள்ளாலபட்டி பேரூராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை பரவை பகுதியிலுள்ள மங்கையர்கரசி கல்லூரியில் இன்று எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தை நோக்கி அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், முகவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர்கள்  திரண்டு வந்ததால் பரபரப்பானது. போலீசார் உடனடியாக அனைவரையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.இதனால் முகவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com