மாநில கல்விப் படிப்பை இழிவுபடுத்துவதா? ஸ்டாண்ட் அப் காமெடி நடிகருக்கு மதுரை SP பதிலடி!

மாநில கல்விப் படிப்பை இழிவுபடுத்துவதா? ஸ்டாண்ட் அப் காமெடி நடிகருக்கு மதுரை SP பதிலடி!
மாநில கல்விப் படிப்பை இழிவுபடுத்துவதா? ஸ்டாண்ட் அப் காமெடி நடிகருக்கு மதுரை SP பதிலடி!

கல்வி உரிமை குறித்த பல கருத்துகள், விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் அபிஷேக் குமார் என்பவர் பேசியிருந்தது நெட்டிசன்களின் கடுமையான விமர்சனத்துக்கு வித்திட்டிருக்கிறது.

ஆங்கில வார்த்தை உச்சரிப்புகளை மக்கள் எப்படி இடங்களுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்கிறார்கள் என்பது குறித்து ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் அபிஷேக் குமார் பேசியிருந்தார். அதில், மாநில கல்விமுறையில் பயின்றதால் IQ அளவு குறைவாக இருக்கும். Renault என்ற காரின் பெயரில் சமயங்களில் Renault-uh உச்சரித்தாக கூறுகிறார்.

அதற்கு கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அதேதான் என ஆமோதித்த பேச, அதற்கு அபிஷேக், “எதாவது பெரிய கம்பெனிக்குள் நுழையும் போது மட்டும் அந்த உச்சரிப்பு மாறிவிடும். சரிதானே?” எனக்கூறி பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

ஆனால் அபிஷேக்கின் இந்த வீடியோவை பகிர்ந்த ட்விட்டர் பயனர் ஒருவர், “ஸ்டேட் போர்டு கல்வி என்றால் குறைந்த அளவு IQதானா? மாநில கல்வியில் படித்த அனைவருக்குமே மேலான IQ உடன் தான் இருக்கிறார்கள்.

இப்படியான ரேசிசமான கருத்துகளை கூறுவதற்கு பதில் முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள். இல்லையேல் பொதுமக்களே உங்களை திருத்துவார்கள்” என காட்டமாக பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோ பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டும் வைரலாக்கப்பட்டும் வந்த நிலையில், மதுரை மாவட்ட கண்காணிப்பாளரும் டாக்டருமான வருண் குமார் ஐ.பி.எஸ். மாநில கல்வியில் பயில்வதன் பெருமை குறித்த வைரலான ட்வீட்டிலேயே பதிலளித்திருக்கிறார்.

அதன்படி, “நான் மாநில கல்வி முறையில்தான் படித்தேன். 2010ம் ஆண்டு CSE தேர்வில் ஆல் இந்தியா ரேங்கிங்கில் 3வதாக வந்தேன். அப்போது இது குறைந்த IQவா?” எனக் கேட்டு ட்வீட்டியிருந்ததோடு அந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பின் செய்யப்பட்ட ட்வீட்டாகவும் வைத்திருக்கிறார்.

ஏனெனில் மாநில கல்வி முறையில் படித்து சாதிக்கும் மாணவர்களின் செயல் அனைவருக்கும் தெரியும்படி இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருக்கிறார் வருண் குமார் ஐ.பி.எஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com