\
மதுரை: பேரூராட்சிகளில் போட்டியிட்ட தாய் - மகன், கணவன் - மனைவி வெற்றி!

மதுரை: பேரூராட்சிகளில் போட்டியிட்ட தாய் - மகன், கணவன் - மனைவி வெற்றி!

மதுரை: பேரூராட்சிகளில் போட்டியிட்ட தாய் - மகன், கணவன் - மனைவி வெற்றி!
Published on

மதுரை பேரூராட்சி வாக்கு எண்ணிக்கையில் தாய், மகன், கணவன் மனைவி, பொறியியல் பட்டதாரி இளம் பெண் வெற்றி என பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், பரவை, அ.வெள்ளாலபட்டி பேரூராட்சிகளில் நடைபெற்ற வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி; 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வள்ளிமயில் என்பவரும், 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட அவரது மகன் மருதுபாண்டியனும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 5வது வார்டில் போட்டியிட்ட கோவிந்தராஜ், 4வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அவரது மனைவி ரேணுகா ஈஸ்வரி என கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் 18வது வார்டில் போட்டியிட்ட அசோக் மற்றும் 13 வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி சூர்யா ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் வாடிப்பட்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட 22 வயதான பொறியியல் பட்டதாரி பிரியதர்ஷினி வெற்றி பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com