மதுரை: பாதாள சாக்கடை உடைப்பை போட்டி போட்டு சரிசெய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: பாதாள சாக்கடை உடைப்பை போட்டி போட்டு சரிசெய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள்
மதுரை: பாதாள சாக்கடை உடைப்பை போட்டி போட்டு சரிசெய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள்

மதுரையில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பை அதிமுக - திமுக வேட்பாளர்கள் போட்டி போட்டு சரி செய்தனர்.

மதுரை 76வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் திடீர்நகர் பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அதே பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பால ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அந்த தெருவில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறிக் கொண்டிருந்தது. அதனை கண்ட அதிமுக வேட்பாளர் பால ராமச்சந்திரனும் திமுக வேட்பாளர் கார்த்திக் ஆகிய இருவரும் போட்டி போட்டு பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்த நிகழ்வு வேடிக்கையாக இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com