காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை?: மறு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
தென்காசியில் காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவரின் மரணம் தொடர்பாக, மறு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். கடந்த 21 ஆம் தேதி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அருண்குமாரை, காவல்துறையினர் அழைத்துச் சென்று, இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
(மாதிரிப்படம்)
மறுநாள் காவல் நிலையம் சென்ற அருண்குமாரை காவல் துறையினர் தாக்கியதாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் அருண்குமாரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி ஜமுனாபாய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆலங்குளம் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது

