“தமிழக அரசியலில் இரு அமாவாசைகள் இருக்கிறார்கள்” - மதுரை தேர்தல் பரப்புரையில்உதயநிதி பேச்சு

“தமிழக அரசியலில் இரு அமாவாசைகள் இருக்கிறார்கள்” - மதுரை தேர்தல் பரப்புரையில்உதயநிதி பேச்சு

“தமிழக அரசியலில் இரு அமாவாசைகள் இருக்கிறார்கள்” - மதுரை தேர்தல் பரப்புரையில்உதயநிதி பேச்சு
Published on

பாசிச பாஜகவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் என திமுக எம்.எல்.ஏவும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி மதுரை பிரச்சாரத்தில் பேசினார்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை அருகே உள்ள ஆனையூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்....

ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் திமுக 10 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். இரண்டவது கொரோனா தொற்றின் போது சிறப்பாக பணியாற்றினோம். ஆனால், அதிமுக ஆட்சியில் கஜானாவை காலிசெய்து 5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றார்கள்.

இந்தியாவில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் பாராட்டப்படுகிறார். மகளிருக்குகான உரிமை தொகை ஆயிரம் ருபாயை விரைவில் வழங்குவார். தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் நாங்கள் சசிகலா காலை பிடித்து ஆடசிக்கு வரவில்லை. மக்களை ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்துள்ளோம்.

சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வெற்றியை போல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் வெற்றியை வழங்க வேண்டும். தமிழக அரசியலில் இரு அமாவாசைகள் உள்ளனர். அவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். என் மீது எடப்பாடி பழனிசாமி அதிக பாசம் வைத்துள்ளார்

அதனால் தான் பொய்யான வாக்குறுதியை கொடுத்து விட்டு காணாமல் போய் விட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எங்கும் செல்ல மாட்டேன் சட்டமன்றத்தில் அவருக்கு எதிராகதான் அமர்ந்திருப்பேன் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com