\
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயர்?: மாநிலங்களவையில் விவாதம்

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயர்?: மாநிலங்களவையில் விவாதம்

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயர்?: மாநிலங்களவையில் விவாதம்
Published on: 

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்து தமிழக அரசிடம் பேச உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். மாநிலங்கள் தத்தமது சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி தரும் தீர்மானங்களின் அடிப்படையில்தான் விமான நிலையங்களுக்கு பெயர் வைப்பதாக அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு தெரிவித்தார். எனினும் தமிழக அரசு பொது இடங்களுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்க கூடாது என்ற கொள்கை வைத்துள்ளதாகவும், தற்போது உறுப்பினர்கள் வலியுறுத்துவதால் தேவர் பெயரை வைப்பது குறித்து தமிழக அரசிடம் பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பசும்பொன் தேவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என புகழாரம் சூட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com