டிரெண்டிங்
மதுரை: வாக்கு சேகரிப்பின்போது பணியாரம் சுட்ட அதிமுக பெண் வேட்பாளர்
மதுரை: வாக்கு சேகரிப்பின்போது பணியாரம் சுட்ட அதிமுக பெண் வேட்பாளர்
பணியாரம் சுட்டுக் கொடுத்து திருமங்கலம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒருசில வேட்பாளர்கள் நூதன முறையில் தங்களுடைய பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை திருமங்கலம் 17வது வார்டு அதிமுக வேட்பாளரான உமா விஜயன் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியாரம் விற்கும் பாட்டியின் கடைக்குச் சென்ற அவர், பணியாரம் சுட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.