மதுரை:  வித்தியாசமாக வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: வித்தியாசமாக வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: வித்தியாசமாக வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்
Published on

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்னும் தேர்தலுக்கு 8 நாட்களே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி 13வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள ஹோட்டலில் புரோட்டா போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் மதுரை 14வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷாஜாதி அபுதாஹீர் கருப்பணசாமி கோயிலில் சாமி கும்பிட்டு தனது பிரச்சாரத்தை துவக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com