மதுரை: தள்ளாத வயதிலும் தனது மகளுடன் வந்து வாக்களித்த 95 வயது மூதாட்டி

மதுரை: தள்ளாத வயதிலும் தனது மகளுடன் வந்து வாக்களித்த 95 வயது மூதாட்டி

மதுரை: தள்ளாத வயதிலும் தனது மகளுடன் வந்து வாக்களித்த 95 வயது மூதாட்டி
Published on

திருமங்கலத்தில் உடல்நிலை முடியாத நிலையிலும் 95 வயது மூதாட்டி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள வார்டு எண் 15-ல் ராமுத்தாய் என்ற 95 வயது மூதாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையிலும் திருமங்கலத்தில் உள்ள அல் அமீன் பள்ளியில் வாக்களிப்பதற்காக தனது மகளுடன் வந்து வாக்களித்தார்.

வாக்காளர் அடையாள அட்டையை பெற்றும் வாக்களிக்காமல் அலட்சியமாக உள்ளவர்கள் மத்தியில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற தள்ளாத வயதிலும் வாக்களித்துள்ள இந்த மூதாட்டியின் செயல் பொதுமக்களின் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com