மதுரை: 3 பேரை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியதாக இரண்டு இளைஞர்கள் கைது

மதுரை: 3 பேரை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியதாக இரண்டு இளைஞர்கள் கைது

மதுரை: 3 பேரை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியதாக இரண்டு இளைஞர்கள் கைது
Published on

மதுரையில் இளம்பெண் உட்பட 3 பேரை பொதுவெளியில் சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருடைய தாய் மற்றும் சகோதரி மூன்று பேரும் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கடைவாசலில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் கந்திஸ்வரன் என்ற இளைஞர்கள் இளம் பெண்ணின் அண்ணன் முத்துப்பாண்டியை தரக்குறைவாக, சாதி ரீதியாக இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளனர்.

இதனை கண்ட தாய் மற்றும் சகோதரி இருவரும் இளைஞர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு இளைஞர்களும் சகோதரி மற்றும் தாய் இருவரையும் பொதுவெளியில் கடுமையாக தாக்கியுள்ளனர், அதனைத்தொடர்ந்து சகோதரர் முத்துப்பாண்டியையும் கை மற்றும் கழுத்துப்பகுதியில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.


இதனைத்தொடர்ந்து முத்துப்பாண்டி மதிச்சியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சாதி ரீதியாக பொதுவெளியில் பேசியதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தாய் மற்றும் சகோதரியைப் பொது வெளியில் வைத்து தாக்கியதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com