டிரெண்டிங்
மதுரை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழப்பு...
மதுரை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழப்பு...
மதுரையில் மின் கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழந்தார்.
மதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் சசி (37). இவர் தனியார் கேபிள் நிறுவனத்தில் லைன்மேன் ஆக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் இன்று காலை அரசரடி பகுதியில் கேபிளில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் மீது கைப்பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சசி உயிரிழந்தார், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கரிமேடு காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.