டிரெண்டிங்
மதுரை: ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை: ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை அலங்காநல்லூரில் ஆற்றில் குளிக்கச் சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன ஊர்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். எலக்ட்ரீசியனாக வேலை செய்துவரும் இவர், பெரிய இலந்தைகுளம் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் தீயணைப்பு படையினர் சுமார் இரண்டு மணிநேரம் போராடி நீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபர் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

