\
கடம்பூர் : 3 வார்டுகளில் மறுதேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

கடம்பூர் : 3 வார்டுகளில் மறுதேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

கடம்பூர் : 3 வார்டுகளில் மறுதேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை
Published on: 

கடம்பூர் பேரூராட்சியில் மூன்று வார்டுகளுக்கு மறுதேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 1, 2, 11 ஆகிய மூன்று வார்டுகளில் திமுக வேட்பாளர்களர்களின் வேட்பு மனுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, அந்த வார்டுகளில் போட்டியிட்ட 3 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில், கடம்பூர் பேரூராட்சிக்கான ஒட்டுமொத்த தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 சுயேட்சை வேட்பாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், "ஓரிடத்தில் இருவர் மட்டும் போட்டியிடுகின்ற போது, அவர்களில் ஒருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் மற்றொருவர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்பதே விதி. அப்படியிருக்கும் போது, இந்த விதியை மீறி மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. எனவே, தேர்தலை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மூன்று வார்டுகளில் மறு தேர்தலை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com