துர்காபூஜா பந்தலில் “பேய்பிடித்ததாக” சொல்லி சிறுமியை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ

துர்காபூஜா பந்தலில் “பேய்பிடித்ததாக” சொல்லி சிறுமியை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ

துர்காபூஜா பந்தலில் “பேய்பிடித்ததாக” சொல்லி சிறுமியை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ
Published on

மத்தியபிரதேசத்தின் சாட்னா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நடந்த துர்காபூஜையில், பேயோட்டுவதாக சொல்லி சிறுமியை ஒருவர் அடித்து துன்புறுத்திய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் ராம்நகர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட நாடோ கிராமத்தில் துர்கா பூஜா பந்தலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பீம் ஆர்மியை சேர்ந்த சுனில் அஸ்தே தெரிவித்தார்.

இந்த வீடியோவில் “ சாமியார் போன்ற ஒரு நபர் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து, அச்சிறுமி வலியால் கத்தும்போது தலைமுடியை இழுப்பதைக் காணலாம். அவன் அவளை பல முறை அடித்து, அறைந்து “நீ யார்” என்று கேட்பது தெரிகிறது. அந்த பெண் தீய சக்திகளால் பிடிக்கப்பட்டுள்ளதை மறுத்தபோது, அவன் மீண்டும் அவளுடைய தலைமுடியை இழுத்து அறைகிறான்.

இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் பலருக்கு முன்னால் நடந்தது, ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவவில்லை, அதற்கு பதிலாக, அவர்களில் சிலர் அவளிடம் “உண்மையைச் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com