தீபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சூழ்ச்சி: மாதவன் சாடல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சூழ்ச்சி இருப்பதாக அவரது கணவர் மாதவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுவில் சொத்துகள், வழக்குகள் குறித்து தெரிவிப்பதற்கான படிவம்-26 முழுமையாக நிரப்பப்படாமல் இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சூழ்ச்சி இருப்பதாக அவரது கணவர் மாதவன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் சாடியுள்ளார். மேலும் பேசிய அவர், சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு வைஷ்ணவ முறைப்படி திதி கொடுத்ததாகவும், ஜெயலலிதா உயிரிழந்த தினம் உறுதியாக தெரியாத காரணத்தினால் அடக்கம் செய்த நாளில் தான் திதி கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு பின்தான் அதுபற்றி கூறமுடியும் என்றும் மாதவன் தெரிவித்தார்.

