”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பதவிக்காகவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில்பாலாஜி இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலின் மேற்கொள்ளும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே திமுகவில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் ஸ்டாலின் விரும்பினால் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில்பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க. சொந்த பிரச்னைகளால் ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, திமுகவிற்கு சென்றுவிட்டார். செந்தில்பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட எனக்கு வருத்தமிருந்திருக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், பதவிக்காகவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் டிடிவி தினகரனை முதல்வராக்குவேன் என்று சொன்ன செந்தில்பாலாஜி தற்போது ஸ்டாலினை முதல்வராக்குவேன் என கூறுவதாகவும் டிடிவி தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு எனவும் தெரிவித்தார்.