ஆர்.கே.நகர் 'வளர்ப்புப் பிள்ளை': மு.க.ஸ்டாலின் ’வாட்ஸ் அப்’ வாக்குறுதி

ஆர்.கே.நகர் 'வளர்ப்புப் பிள்ளை': மு.க.ஸ்டாலின் ’வாட்ஸ் அப்’ வாக்குறுதி

ஆர்.கே.நகர் 'வளர்ப்புப் பிள்ளை': மு.க.ஸ்டாலின் ’வாட்ஸ் அப்’ வாக்குறுதி
Published on

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாட்ஸ் அப்பில் மு.க.ஸ்டாலின் குரல் பதிவு மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

ஆர்.கே.நகரில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மு.க. ஸ்டாலின், வாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதில், கொளத்தூர் தொகுதி தனது செல்லப்பிள்ளை என்றாலும், ஆர்.கே.நகரை வளர்ப்பு பிள்ளையாக கருதி வளர்ச்சியடைய பாடுபடுவேன் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் மாற்றத்திற்கு முன்னோட்டமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றியடையச் செய்யவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com