ஹெச். ராஜாவை சாரணர் இயக்கத் தலைவராக்குவதா? ஸ்டாலின் கண்டனம்

ஹெச். ராஜாவை சாரணர் இயக்கத் தலைவராக்குவதா? ஸ்டாலின் கண்டனம்

ஹெச். ராஜாவை சாரணர் இயக்கத் தலைவராக்குவதா? ஸ்டாலின் கண்டனம்
Published on

சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஹெச். ராஜாவை தேர்ந்தெடுக்க முயற்சி நடப்பதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சாரண -சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவியை ஹெச். ராஜாவுக்கு தாரை வார்க்க முதலமைச்சரும், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூட்டுச் சதி செய்வதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சாரண இயக்கத்தின் புரவலராக ஆளுநரும், துணைப் புரவலராக கல்வி அமைச்சரும் இருக்கும் நிலையில், தலைவர் பதவியை பாரதிய ஜனதாவுக்கு கொடுத்து பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க திரைமறைவு முயற்சிகள் நடக்கிறது என்று கல்வியாளர்கள் கொந்தளிப்பதாவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹெச். ராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய சதி நடந்த நிலையில், முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் மணி போட்டியில் இறங்கியதால், ஹெச். ராஜாவுக்கு வாக்களிக்க கல்வி அதிகாரிகள் கல்வித் துறை அமைச்சர் சார்பில் மிரட்டப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com