\
தனது பாட்டி அஞ்சுகத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி

தனது பாட்டி அஞ்சுகத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி

தனது பாட்டி அஞ்சுகத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி
Published on: 

4ஆவது நாளாக காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் போது அஞ்சுகம் அம்மாளுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று பயணம் 4ஆவது நாளாக திருவாரூரில் தொடங்கியது. இப்பயணதிற்கு முன்னதாக, திருவாரூரில் உள்ள கருணாநிதியின் தாயாரும், ஸ்டாலினின் பாட்டியுமான‌ அஞ்சுகம் அம்மாளின் நினை‌விடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் திருவாரூர் தேர் அருகிலிருந்து நடைப்பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், துர்காலய ரோடு, காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை, சூழிக்கரை வழியாக தேவர்கண்ட நல்‌லூர் வரை சென்று பயணத்தை முடிக்கிறார். பின்பு உணவு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் பயணத்தை தொடங்கும் ஸ்டாலின், கமலாபுரம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, கோ‌ட்டூர் வழியாக திருத்துறைப்பூண்டியில் 4ஆவது நாள் நடைபயணத்தை முடிக்கிறார். இன்றைய நடைபயணத்தின்போது மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com