சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் கவலை
இன்றைய காலக்கட்டத்தில் சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், தற்போது சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இந்தச் சூழலில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலத்திற்கு போதுமான அதிகாரம் வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

