‘நெவர்.. எவர்.. கிவ் அப்’: மு.க.ஸ்டாலின் ஒர்க்அவுட் வீடியோ

‘நெவர்.. எவர்.. கிவ் அப்’: மு.க.ஸ்டாலின் ஒர்க்அவுட் வீடியோ

‘நெவர்.. எவர்.. கிவ் அப்’: மு.க.ஸ்டாலின் ஒர்க்அவுட் வீடியோ
Published on

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிக்ஸ்பேக் வைத்து சினிமாவில் கலக்குவது பழைய ட்ரெண்ட். அதே சிக்ஸ்பேக் வைத்து அரசியலில் கலக்குவதுதான் புது ட்ரெண்ட். அந்த ட்ரெண்டை ஆரம்பித்து வைத்துள்ளார், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பிட்நஸ் மோடில் அவர் செய்யும் ஒவ்வொரு பயிற்சியையும் இந்த வீடியோ பதிவு செய்திருக்கிறது. ஆம்ர்ஸ் தெரிய அவர் ஆஃப் பனியன் உடன் மேற்கொள்ளும் பயிற்சியை நெட்டிசன்கள் தங்களின் நெருங்கிய வட்டத்திற்கு தட்டிவிட்டு வருகிறார்கள். மேலும் விவேகம் ஸ்டைலில் ‘நெவர்.. எவர்.. கிவ் அப்’ என சப் டைட்டில் போட்டு உற்சாகப்படுத்தி வருகிறார்கள். ஸ்டாலின் தினமும் ஒர்க் அவுட் செய்வதற்காகவே செனன்டாஃப் ரோட்டிலுள்ள அவரது வீட்டின் மேல் மாடியில் தனி பயிற்சிக்கூடம் ஒன்றை அமைத்துள்ளார். அந்தப் பயிற்சிக்கூடத்தில்தான் இந்த பயிற்சி வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com