டிரெண்டிங்
மு.க.ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு
மு.க.ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் சுரேன் ராகவன் ஆவார். 41 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை தொடங்க இவர் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். சென்னை வந்துள்ள ராகவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக சந்திக்கவில்லை என்றும் சுரேன் ராகவன் பின்னர் கூறினார்.