டிரெண்டிங்
ஏப். 11ல் தொடங்கி 7 கட்டமாக தேர்தல் - மே 23ல் வாக்கு எண்ணிக்கை
ஏப். 11ல் தொடங்கி 7 கட்டமாக தேர்தல் - மே 23ல் வாக்கு எண்ணிக்கை
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதிகள்
முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11
இரண்டாம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 18
மூன்றாம் கட்ட தேர்தல் - 23
நான்காம் கட்ட தேர்தல் - 29
5ம் கட்ட தேர்தல் - மே 6
6ம் கட்ட தேர்தல் - மே 12
7ம் கட்ட தேர்தல் - மே 19

