அமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

அமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

அமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் வேட்புமனுவை ராகுல் காந்தி கடந்த 4ஆம் தேதி தாக்கல் செய்தார். அதன்பிறகு வயநாடு தொகுதியில்  பேரணியாகவும் சென்று தொண்டர்களை சந்தித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள மற்றொரு தொகுதியான உத்தரபிரதேசத்தின் அமேதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அனில் சிங், “காங்கிரஸ் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அத்துடன் மாபெரும் பேரணியும் நடத்தவுள்ளார். அதாவது வேட்புமனு தாக்கலுக்கு முன்பு 3 கிலோமிட்டர் தூரம் சாலையில் பேரணியாக செல்லவுள்ளார். மேலும் வேட்புமனு தாக்கலின் போது ராகுல் காந்தியுடன் அவரது தாய் சோனியா காந்தி மற்றும் தங்கை பிரியங்கா காந்தி ஆகியோர் வரவுள்ளனர்”எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி  கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாகவுள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இராணியை 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறையும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ஸ்மிருதி இரானி நாளை வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com