71 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நான்காம் கட்டத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இம்முறை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 302 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 4ஆம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அதன்படி நாளை பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நாளை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.
மாநிலம் தேர்தல் தொகுதிகள்
பீகார் 5
ஒடிசா 6
மேற்கு வங்கம் 8
ஜம்மு-காஷ்மீர் 1
மகாராஷ்டிரா 17
உத்தரப்பிரதேசம் 13
ராஜஸ்தான் 13
ஜார்கண்ட் 3
மத்தியப் பிரதேசம் 6
காஷ்மீர் மாநிலத்தில் அனந்த் நாக் தொகுதியில் ஒரே ஒரு பகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஒரு தொகுதியில் 3ஆவது கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 4ஆம் கட்டத் தேர்தலில் 945 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 12 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்களிக்க ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.